ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பு மாநாடு - 26.12.2025 நிகழ்வு
ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பு மாநாடு - 26.12.2025 நிகழ்வு
ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பு மாநாட்டின் முன்னோட்டமாக - 26.12.2025 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிமுதல் இரவு 08.00 மணி வரை திருச்சி, ஹோட்டல் பிளாசம்ஸ்-ல் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பினுடைய தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு உயர்திரு. S. ஜெயகருணாகரன் பிள்ளை, தலைவர், AV International மற்றும் இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபை அவர்கள் தலைமை வகித்தார்கள்.
கூட்டத்தில் திருச்சி திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் தலைமைச்சங்கத்தின தலைவர் Dr. P. செல்வராஜ் பிள்ளை அவர்கள முன்னிலை வகித்தார்.
இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையினுடைய முன்னாள் தலைவர் திரு.T. அமிர்தலிங்கம் பிள்ளை அவர்கள், மலேசியா ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு. டத்தோ சண்முகநாதன் பிள்ளை அவர்கள், ஆஸ்திரேலியா ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு. சுந்தரேசன் நடேசன் பிள்ளை அவர்கள், திருச்சி திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் தலைமைச்சங்க துணைத்தலைவர் திரு. P. புரவி, செயலாளர் A. சதீஸ்வரன், பொருளாளர் T. செந்தில்குமார், திருச்சி மாநகர ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு. S. ரவி, துணைத்தலைவர் S. மகேந்திரன் , செயலாளர் R. சுப்ரமணியன், பொருளாளர் S.C. முத்தையா, இணைச்செயலாளர்கள் M.செந்தில்பாபு, R. நிஷாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் தலைவர் உயர்திரு.S.ஜெயகருணாகரன் பிள்ளை அவர்கள் தலைமை உரை ஆற்றினார். தனது தலைமையுரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பினுடைய நடவடிக்கைகளை பற்றி எடுத்துரைத்தார். மேலும் தனது உரையில் 27.12.2025 அன்று நடைபெறும் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச மகாநாட்டில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்றும், ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் சட்டத்திட்டங்களை (யாதஸ்து) எவ்வாறு வடிவமைக்கவேண்டுமென்றும், என்னென்ன திருத்தங்கள் கொண்டுவரவேண்டுமென்றும் எடுத்துரைத்தார்.
நீண்ட நெடுநேர கருத்து பரிமாற்றங்களின் அடிப்படையில் வருகைத்தந்த அனைத்து தலைவர்களுடைய ஆலோசனைகளின் படி ஒருமனதாக ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டது. இந்த சட்டத்திட்டங்களை 27.12.2025 நடைபெறும் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் மாநாட்டில் ஒப்புதல் பெறுவதென்று தீர்மானிக்கப்பட்டது.
இரவு 08.00 மணிக்கு விருந்தோம்பலுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
Image Gallery
(புகைப்படத் தொகுப்பு)