AV International Logo
AV INTERNATIONALஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பு
AVS36.ORG
AV International Logo

AV International

ஆறுநாட்டு வேளாளர்

ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பு மாநாடு - டிசம்பர் 27, 2025 நாள் நிகழ்வு
Events

ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பு மாநாடு - டிசம்பர் 27, 2025 நாள் நிகழ்வு

Saturday, December 27, 2025 @ 3:30 AM
Kalaiyarangam, Trichy

ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பு மாநாடு - டிசம்பர் 27, 2025 நாள் நிகழ்வு

27.12.2025 சனிக்கிழமை காலை 09.00 மணியளவில் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச மாநாட்டிற்கு உயர்திரு. S. ஜெயகருணாகரன் பிள்ளை, தலைவர், AV International மற்றும் இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபை அவர்கள் தலைமையில், இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையினுடைய முன்னாள் தலைவர் திரு.T. அமிர்தலிங்கம் பிள்ளை அவர்கள், மலேசியா ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு. டத்தோ சண்முகநாதன் பிள்ளை அவர்கள், ஆஸ்திரேலியா ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு. சுந்தரேசன் நடேசன் பிள்ளை அவர்கள், மலேசியா ஆறுநாட்டு வேளாளர் சங்க செயலாளர் திரு. P. மகேஸ்வரன், இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சங்கத்துணைத்தலைவர் திரு. A. ரவிசங்கர், இலங்கை சேர்ந்த கருணாமூர்த்தி, திரு. P.வைத்தியலிங்கம், ராஜ் பிள்ளை, நாகேந்திரன், P. ஏகாம்பரம், சிங்கப்பூர் சிவலிங்கம் பெரியசாமி ஆகியோர் மங்கள இசையுடன் கலையரங்கம் அருகிலுள்ள ஹோட்டலில் இருந்து ஊர்வலமாக விழா நிகழ்விற்க்கு அழைத்து வரப்பட்டனர்.

பல்வேறு நாடுகளிலிருந்து வருகைத்தந்த அனைவரையும் வரவேற்று மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதன்பிறகு மாநாட்டு துவங்குவதற்கான பூஜை அரசாணி பூசாரியால் செய்யப்பட்டது. சரியாக 09.00 மணியளவில் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் தலைவர் உயர்திரு. S.ஜெயகருணாகரன் பிள்ளை அவர்கள் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச கொடியினை ஏற்றி வைத்தார். அவரைத் தொடர்ந்து திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் தலைமைச்சங்கத்தினுடைய தலைவர் Dr. P. செல்வராஜ் பிள்ளை அவர்கள் ஆறுநாட்டு வேளாளர் தலைமைச்சங்கத்தினுடைய கொடியினை ஏற்றி வைத்தார்கள். அதன்பிறகு திருச்சி மாநகர ஆறுநாட்டு வேளாளர் தலைவர் திரு. S. ரவி அவர்கள் ஆறுநாட்டு வேளாளர் மாநகர சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.

ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் தலைவர் உயர்திரு.S. ஜெயகருணாகரன் பிள்ளை மாநாடு துவக்கத்தை அறிவித்தார்கள்.

அதனை தொடர்ந்து அனைத்து சர்வதேச தலைவர்களும் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மாநாட்டின் முதல் நிகழ்வாக இறைவணக்கம் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து ஆறுநாட்டு வேளாளர் சங்க பாடலும் மற்றும் 36 கோத்திர பெயர் கொண்ட கோத்திர பாடலும் பாடப்பட்டது. ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச மாநாட்டிற்கு வருகைத்தந்த அனைவரையும் மாநாட்டின் விழாக்குழு தலைவர் திரு. G. ராஜசேகரன் பிள்ளை அவர்கள் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். வரவேற்புரையில் சர்வதேச மாநாட்டின் நோக்கங்கள், மாநாட்டினால் ஏற்படும் பயன்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். வரவேற்புரை முடிந்தவுடன் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பினுடைய முதல் தலைவர் டத்தோ மனோகர் அவர்களின் மறைவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் கௌரவிக்கப்பட்டனர். ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் தலைவர் உயர்திரு.S. ஜெயகருணாகரன் பிள்ளை அவர்கள் மாநாட்டிற்கு தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். அவர் தனது தலைமையுரையில் இலங்கையில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஆறுநாட்டு வேளாளர் மாநாட்டின் சிறப்பை பற்றி எடுத்துரைத்தார். அதோடு, நமது சமுதாயம் எவ்வாறு நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், குல தெய்வ கோவில்களையும் எவ்வாறு காக்க வேண்டுமென்றும், நமது சமுதாய பெருமைகளையும் எடுத்துரைத்தார். நமது சமூக மக்கள் மாற்றுச்சாதியில் திருமணம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி பேசினார்.

அதன் பின்னர் அவர்கள் அடுத்த 2026-28 ஆண்டுக்கான அடுத்த சர்வதேச தலைமைப் பதவியை திரு. Dr. P. செல்வராஜ் பிள்ளை, தலைவர், ஆறுநாட்டு வேளாளர் தலைமைச்சங்கம், திருவானைக்காவல், திருச்சி அவர்களுக்கு வழங்கி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

திரு. Dr. P. செல்வராஜ் பிள்ளை அவர்கள் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் தலைவராக உறுதிமொழி எடுத்துக்கொண்டு, AV International தலைவர் பதவி ஏற்றுக்கொண்டு ஏற்புரை ஆற்றினார்.

அவர் தனது ஏற்புரையில் நம் சமுதாய இளைஞர்களுடைய எதிர்கால முன்னேற்றத்தை பற்றியும், வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பதற்கான உதவி செய்தல் பற்றியும் நமது சமுதாய இளைஞர்கள் தொழில் முனைவோர் ஆவதற்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதற்கு ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பு தயாராக உள்ளது என்றும் அதனை நமது சமுதாய மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுகொண்டார். நம் சமுதாய குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறையாவது குல தெய்வம் கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

தலைவர் ஏற்புரை ஆற்றிய பிறகு, இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையினுடைய முன்னாள் தலைவர் திரு. T. அமிர்தலிங்கம் பிள்ளை அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தனது வாழ்த்துரையில் நமது கோத்திர குல தெய்வ கோவில்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு குல தெய்வ இறை வழிபாட்டை ஊக்குவிக்க வேண்டுமென்றும் நமது வருங்கால சந்ததிகளை எவ்வாறு நாம் அறிவுரை கூறி நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டுமென்று எடுத்துரைத்தார்.

அவரை தொடர்ந்து மலேசியா ஆறுநாட்டு வேளாளர் தலைவர் டத்தோ சண்முகநாதன் அவர்கள் - நமது மக்களின் சர்வதேச சிந்தனையை பற்றி எடுத்துரைத்தார். தொழில் துறையில் நமது சமூக இளைஞர்களுக்கு எவ்வாறெல்லாம் உதவி செய்ய முடியுமென்று உறுதியளித்தார். தன்னை நாடினால் மலேசியாவில் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உதவி செய்வதாக எடுத்துக்கூறினார்.

அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா ஆறுநாட்டு வேளாளர் தலைவர் திரு. சுந்தரேசன் நடேசன் பிள்ளை அவர்கள் குல தெய்வ வழிபாடு நமது கலாச்சாரம் வெளிநாட்டில் வாழும் நம்மின சாதனையாளர்கள் பற்றிய விபரங்களை எடுத்துரைத்தார். ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க செயலாளர் திரு. A. சதீஸ்வரன் அவர்கள் மாநாட்டின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.

சென்னை ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் Er. R. வீரக்குமார் அவர்கள் தனது வாழ்த்துரையில் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் தலைவர் மற்றும் பொறுப்பாளர் பதவியை 2 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அத்துடன் மாநாட்டில் 15 கோரிக்கைகளை முன்வைத்து அதனை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். திருச்சியில் சர்வதேச ஆறுநாட்டு வேளாளர் சங்கம் சார்பாக பெரிய திருமண மண்டபத்தை கட்டி அதனை சர்வதேச ஆறுநாட்டு வேளாளர் நினைவை போற்றும் வகையில் மாளிகையாக கட்ட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

சேலம் ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு. S.K. பெரியசாமி பிள்ளை அவர்கள் நமது சமூக ஒற்றுமையை பற்றியும், குல தெய்வ கோவில் பற்றியும் எடுத்துரைத்தார்.

நாமக்கல் ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு. P. செல்வராஜ் பிள்ளை தனது உரையில் நாமக்கல் ஆறுநாட்டு வேளாளர் சங்கம் கட்ட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். கரூர் ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு. M. பெரியசாமி பிள்ளை, துறையூர் ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு.K.S. விஜயகுமார், பெரம்பலூர் ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு.V.E.சுகுமாரன் பிள்ளை, கோவை ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் திரு.R. மனோகரன் பிள்ளை மற்றும் திருச்சி மாநகர ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் S. ரவிப்பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

வாழ்த்துரை முடிவுற்ற உடன் குல தெய்வ வழிபாடு, கலாச்சாரம், பண்பாடு, சமுதாய மேன்மை , உலகளாவிய தொழில் வாய்ப்புகள் , கல்வி மற்றும் வெளிநாட்டில் தொழில் துவங்குவது பற்றி தலைவர்களின் கலந்துரையாடல் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடைய கருத்துகள் பெறப்பட்டன.

இக்கலந்துரையாடலில் கரியமாணிக்கம் திரு.மகாலிங்கம் அவர்கள் சாத்துடையான் கோத்திரம் ஒன்றாக இருந்தாலும் பல பிரிவுகளாக இருக்கிறது. அதனை ஏற்கனவே இருக்கின்ற கோத்திரங்களில் தனித்தனி பிரிவாக இருக்கின்ற சாத்துடையான் கோத்திரத்தை கூடுதலாக சேர்க்கவேண்டுமென்று கோரிக்கை வைத்தார். இந்த கருத்து சபையில் விவாதிக்கப்பட்டது. இந்த கருத்திற்கு கண்டியை சேர்ந்த கருணாமூர்த்தி அவர்கள் சாத்துடையான் கோத்திரத்தை பல பிரிவுகளாக இல்லாமல் ஒரே கோத்திரமாக இருக்கவேண்டுமென்றும் வேண்டுமானால் அவர்கள் வணங்கும் தெய்வத்தை குறிப்பிட்டுக்கொள்ளலாம் என்றும எடுத்துரைத்தார். திருச்சி ரவிசங்கர் கருப்பையா அவர்கள் ஏற்றுமதி தொழில் எவ்வாறு செய்வது, அதற்கு வெளிநாட்டிலுள்ள நம்மின மக்கள் உதவி செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மலேசியா ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தலைவர் டத்தோ சண்முகநாதன் அவர்கள் ஏற்றுமதி தொழில் செய்வதற்கான எல்லா உதவிகளையும் மலேசியாவில் செய்வதாக உறுதியளித்தார். திருச்சி திரு. சரவணன் கணேசன் அவர்கள் உயர்கல்வி பெற்று வெளிநாடுகளில் வேலை செய்ததன் பலன், நம் நாட்டில் சொந்த தொழில் செய்தால் கிடைக்குமென்று எடுத்துரைத்தார்.

இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபை முன்னாள் தலைவர் திரு. T. அமிர்தலிங்கம் பிள்ளை, ஆஸ்திரேலியா திரு.சுந்தரேசன் நடேசன் பிள்ளை ஆகியோர் குல தெய்வ வழிபாட்டை பற்றி எடுத்துரைத்தனர். திரு. கணேசன் பிள்ளை அவர்கள் நன்றியுரை கூற மதிய உணவுடன் காலை அமர்வு கூட்டம் நிறைவுபெற்றது.

ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் அடுத்த அமர்வாக 27.12.2025 சனிக்கிழமை மாலை சரியாக 06.01-க்கு திருச்சி ஹோட்டல் கண்ணப்பா கிராண்ட் கார்டனில்

Dr. P. செல்வராஜ், தலைவர், ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பு மற்றும் ஆறுநாட்டு வேளாளர் தலைமைச்சங்கம் தலைமையில் இறைவணக்கத்துடன் துவங்கப்பட்டது.

கூட்டத்திற்கு வருகைத்தந்த அனைவரையும் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் விழாக்குழு தலைவர் திரு. G. ராஜசேகரன் பிள்ளை வரவேற்பை நிகழ்த்தினார்.

கூட்டத்திற்கு வருகைத்தந்த லண்டனில் வசிக்கும் ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை நிபுணர் M. செந்தில்நாதன் அவர்களும் மற்றும் சென்னை அப்பல்லோ டாக்டர்.திரு.பாலா-வும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் சட்டத்திட்டங்கள் வாசிக்கப்பட்டு சந்தேகங்களுக்கு விளக்கமளித்து ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் (AV International) பொதுக்குழு கூட்டத்தில் சட்டத்திட்டங்களும், தீர்மானங்களும் தலைவர் அவர்களால் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இரவு விருந்துடன் ஆறுநாட்டு வேளாளர் சர்வதேச பேரமைப்பின் மாநாடு இனிதே நிறைவுற்றது.

Image Gallery

(புகைப்படத் தொகுப்பு)

32 PHOTOS
Event Photo 1
Event Photo 2
Event Photo 3
Event Photo 4
Event Photo 5
Event Photo 6
Event Photo 7
Event Photo 8
Event Photo 9
Event Photo 10
Event Photo 11
Event Photo 12
Event Photo 13
Event Photo 14
Event Photo 15
Event Photo 16
Event Photo 17
Event Photo 18
Event Photo 19
Event Photo 20
Event Photo 21
Event Photo 22
Event Photo 23
Event Photo 24
Event Photo 25
Event Photo 26
Event Photo 27
Event Photo 28
Event Photo 29
Event Photo 30
Event Photo 31
Event Photo 32