
+2 ஆறுநாட்டு வேளாளர் மாணவ/மாணவிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!
+2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நமது சமூக மாணவ/மாணவிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!
அன்புடையீர்!வணக்கம்.
நமது சமூகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ/மாணவிகள் + 2தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்தருப்பீர்கள்.இந்த வெற்றி உங்களது கடின உழைப்பிற்கும்,கனவுகளுக்கும், உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தந்த ஊக்கத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.
உங்கள் ஒவ்வொருவரின் வெற்றியும், நம் சமூகமே பெருமிதம் கொள்ளும் விஷயம் ஆகும்.
12-ம் வகுப்பு என்கிற முக்கியமான கட்டத்தை நீங்கள் கடந்திருக்கிறீர்கள் – இது உங்கள் கல்விப் பயணத்தில் ஒரு பெரிய மைல்கல் ஆகும். தாங்கள் உயர்கல்வி பெற்று, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முதல் படியாகும். தங்களின் இந்த வெற்றிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் வெற்றிக்கான பலனை அடையும் வகையிலும், நீங்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பை நமது சமூகத் தலைவர்களால் நடத்தப்படும் 3 கல்வி நிறுவனங்களில் உங்கள் எதிர்காலத்திற்காக சிறப்பான முயற்சியை மேற்கொண்டு உதவி செய்ய முன்வந்துள்ளனர். கல்லூரிகளில் நமது சமூகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள, அதிக மதிப்பெண் பெற்று உயர் கல்வி பெறு விரும்பும் மாணவ/மாணவிகளுக்கு, இலவச கல்வி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர்
அக்கல்லூரிகள் விவரம்:
1) நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பாட்டி, திருச்சி மாவட்டம்:
இங்கு 10 மாணவ /மாணவிகளுக்கு இளங்கலை கலை மற்றும் அறிவியல் பட்டயப் படிப்பு மிகச்சிறந்த தொழில்நுட்ப படிப்புகளைக் கொண்ட இக்கல்லூரி, உங்கள் கனவுகளை நனவாக்கத் தேவையான தளமாகும்.
2)சிவானி பொறியியல் கல்லூரி, திருச்சி:
இக்கல்லூரியிலும் 5 இலவச பொறியியல் படிப்புகள் உள்ளன. சிறந்த கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை இக்கல்லூரி வழங்குகிறது.
3)இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, திருச்சி:
இதிலும் 5 பொறியியல் பட்டப்படிப்புகளுக்கும், 5 கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப் பட்டப்படிப்புகளுக்கும் இடம் கிடைக்கும். இந்த கல்லூரியிலும் தரமான கல்வி மற்றும் உங்கள் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான பலதரப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இவை நமது ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இரண்டாவது, பொருளாதார நிலையில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மூன்றாவது, பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
அதோடு நமது நிர்வாக குழு உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறவேண்டும்.
இந்த 4 க்கு நிபந்தனைகளுக்கு உட்படுபவர்களே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விருப்பம் உள்ளவர்கள் திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் சங்க அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் (தொலைபேசி எண்: +91 9626499997)
கடைசி வேண்டுகோள்:
வெற்றி பெற்ற நம் பிள்ளைகளே, இது ஒரு பொற்கால வாய்ப்பு. உங்கள் மதிப்பெண்கள் மற்றும் பொருளாதார நிலைமையை வைத்து, இந்த இலவச இருக்கைகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நம் சமூகத் தலைவர்கள் உங்கள் படிப்பிற்காக எடுத்துள்ள இந்த முயற்சி உங்கள் வாழ்வினை உயர்த்திடும்.
தொடர்ந்து வெற்றி பெறுங்கள்!
நம் சமூகம் முன்னே வர, உங்கள் படிப்பே வழி!
அன்புடன்,
Dr. P. செல்வராஜ், தலைவர், ஆறுநாட்டு வேளாளர் சங்கம், திருவானைக்காவல்